செய்திகள்
வவுணதீவு- கரவெட்டி மற்றும் ஆயித்தியமலை - கரடியனாறு வீதிகள் திறப்பு விழா
- வழங்கியது
- வீதி அபிவிருத்தி திணைக்களம்
- திகதி
- 4 ஏப்ரல் 2024
இந்தப் பக்கத்தின் தமிழ் பதிப்பு விரைவில் சேர்க்கப்படும். அதுவரை, மூல ஆங்கில பதிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் (TCAMP) நிர்மாணிக்கப்பட்ட வவுணதீவு- கரவெட்டி மற்றும் ஆயித்தியமலை - கரடியனாறு காப்பெட் வீதிகள் கௌரவ ஆளுநர் அவர்களால் 30.03.2024 அன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் (TCAMP) நிர்மாணிக்கப்பட்ட வவுணதீவு- கரவெட்டி மற்றும் ஆயித்தியமலை - கரடியனாறு காப்பெட் வீதிகள் கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ.செந்தில் தொண்டமான் அவர்களால் 30.03.2024 அன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தக இராஜாங்க அமைச்சருமான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.மூ.கோபாலரெத்தினம் அவர்களுடன் வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.