News
வவுணதீவு- கரவெட்டி மற்றும் ஆயித்தியமலை - கரடியனாறு வீதிகள் திறப்பு விழா
- Issued by
- Department of Road Development
- Date
- 4 April 2024
உலக வங்கியின் நிதியுதவியுடன் (TCAMP) நிர்மாணிக்கப்பட்ட வவுணதீவு- கரவெட்டி மற்றும் ஆயித்தியமலை - கரடியனாறு காப்பெட் வீதிகள் கௌரவ ஆளுநர் அவர்களால் 30.03.2024 அன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் (TCAMP) நிர்மாணிக்கப்பட்ட வவுணதீவு- கரவெட்டி மற்றும் ஆயித்தியமலை - கரடியனாறு காப்பெட் வீதிகள் கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ.செந்தில் தொண்டமான் அவர்களால் 30.03.2024 அன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தக இராஜாங்க அமைச்சருமான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.மூ.கோபாலரெத்தினம் அவர்களுடன் வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.