முதன்மை உள்ளடக்கத்துக்குச் செல்க
கிழக்கு மாகாண சபை නැගෙනහිර පළාත් සභාව Eastern Provincial Council
மெனு

மெனு

எனது விடயங்கள்

செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காணி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்களப் போதனாசிரியர்களுக்கான ஈ சிலிம் பயிற்சி 2025 பெப்ரவரி 27, 28 ஆந் திகதிகளில் நடைபெற்றது.

திகதி
1 மார்ச் 2025
இயந்திர மொழிபெயர்ப்பு

இந்த உரை மாகாண மொழிபெயர்ப்புச் சேவையான ROSETTA மூலம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது; இதில் தவறுகள் இருக்கலாம்.

மூலப் பதிப்பை ஆங்கில மொழியில் படிக்க

இந்த மொழிபெயர்ப்பு சரியானதா? திருத்தத்தைப் பரிந்துரைக்க

திருக்கோணமலை மாவட்டத்தின் பிரதேசசெயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காணி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்களப் போதனாசிரியர்களுக்கான ஈ சிலிம் பயிற்சி 2025 பெப்ரவரி 27, 28 ஆந் திகதிகளில் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயற்சிப் பிரிவில் இடம்பெற்றது.

திருக்கோணமலை மாவட்டத்தின் பிரதேசசெயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காணி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்களப் போதனாசிரியர்களுக்கான ஈ சிலிம் பயிற்சி 2025 பெப்ரவரி 27, 28 ஆந் திகதிகளில் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயற்சிப் பிரிவில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணக் காணிநிருவாகத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டுநாள் கொண்ட பயிற்சியை ஆரம்பித்து வைத்த மாகாணக் காணி ஆணையாளர் திருமதி வ.ரவீந்திரன் பேசுகையில்; முறைமைப்படுத்தப்பட்ட அரசபணிகள் பல இணையவழி செயன்முறையாக மாற்றப்பட்டு வருவது காலத்தின் தேவையாக உள்ளது. அந்தவகையில் காணி தொடர்பான விடயங்கள் “அரச காணி தொடர்பான தகவல் மற்றும் முகாமைத்துவ முறைமை” எனும் இணையவழித் தரவுத்தளத்தினுடாகச் செயற்படுத்தபடும் என்றார்.

காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம், அரசகாணிச் சட்டம் என்பனவற்றினூடக மக்களுக்கு வழங்கும் காணி ஆவணங்கள் எதிர்காலத்தில் E-SLIMS ஊடாகவே முன்னெடுக்கப்படும் என்றும், அதற்காகவே குறித்த அலுவலகர்கள் அனைவருக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படுகின்றது எனவும் கூறினார். இதன் மூலம் மக்கள் பணி துரித கதியில் வழங்கப்படும் என்பதுடன் ஆவணங்களும் தரவுத்தளத்தில் பேணமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

இப்பயிற்சியின் வளவாளராக திரு.என்.அருட்செல்வன் - உதவிக்காணி ஆணையாளர், காணி ஆணையாளர் திணைக்களம், கொழும்பு. கே.எல்.எம்.முஸமில் - உதவிக்காணி ஆணையாளர் , கிழக்குமாகாணக் காணித்திணைக்களம், திரு.ரி.மோகன் - காணி உத்தியோகத்தர், திரு.ஏ.இந்துஜன் - முகாமைத்துவ உதவியார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

நீங்கள் தேடியது கிடைத்ததா?

உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது தொலைபேசி இலக்கம் போன்ற தனிப்பட்ட விபரங்களைச் சேர்க்க வேண்டாம். இந்தப் படிவத்துக்கு எம்மால் பதிலளிக்க முடியாது. கேள்வி கேட்க அல்லது முறைப்பாடு செய்ய "எம்மைத் தொடர்புகொள்ள" பகுதியைப் பயன்படுத்துங்கள்.

https://epc.lk/ta/news/896-e-slims-training-for-development-officers-land-officers-and இலிருந்து 27 நவம்பர் 2026 அன்று அச்சிடப்பட்டது