முதன்மை உள்ளடக்கத்துக்குச் செல்க
கிழக்கு மாகாண சபை නැගෙනහිර පළාත් සභාව Eastern Provincial Council
மெனு

மெனு

எனது விடயங்கள்

செய்திகள்

24 ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாத நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி யின் பங்கேற்புடன் மீண்டும் ஆரம்பம்

வழங்கியது
ஆளுநர் செயலகம்
திகதி
23 மே 2026
இயந்திர மொழிபெயர்ப்பு

இந்த உரை மாகாண மொழிபெயர்ப்புச் சேவையான ROSETTA மூலம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது; இதில் தவறுகள் இருக்கலாம்.

மூலப் பதிப்பை ஆங்கில மொழியில் படிக்க

இந்த மொழிபெயர்ப்பு சரியானதா? திருத்தத்தைப் பரிந்துரைக்க

·2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். · மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலையால் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது.

·2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். · மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலையால் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது.

– ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவிப்பு.

2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது என்றும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தாலும், அதனை கையாள்வதற்கான ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, இனவாதத்திற்கு இடமளிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவது, அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குவது மற்றும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளைக் குறைப்பது ஆகியவையே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தபோது மக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பாக இருந்தது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் தற்போது கணிசமான பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். அதேபோல், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தனது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் அது நிறைவேறாது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பார்க்காமல் அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ரத்து செய்து, அரசியல்வாதிகளைப் பொதுமக்களுக்காக பணியாற்றுபவர்களாக மாற்றுவதற்குத் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று (22) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன. மிகவும் வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து, அதனை எதிர்கால சந்ததியினருக்குக் கையளிக்கும் நோக்கிலும், நிந்தவூர் பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட தொகை 945.04 மில்லியன் ரூபா ஆகும். இதில் 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய நிதியும் தேவைக்கேற்ப ஒதுக்கப்படவுள்ளதுடன், திட்டத்தின் முழுமையான நிர்மாணப் பணிகள் 2027-12-31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

இந்த நாட்டு மக்கள் இணைந்து புதிய அரசாங்கமொன்றை உருவாக்கினார்கள். அந்த அரசாங்கத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மெலே, பேர்கர் உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் ஆதரவும் கிடைத்தது. வரலாற்றில் எந்தனை ஆட்சிகள் வந்தாலும் இந்த அரசாங்கம் சகல மக்களினதும் சகல பிரதேசங்களினதும் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும்.

நீங்கள் எம்மிடம் ஆட்சியை ஒப்படைக்க பல காரணங்கள் உள்ளன. நீண்ட காலமாக சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கிடையில் மோதல்கள், அவநம்பிக்கைகளை வளர்க்கும் இனவாத அரசியலே காணப்பட்டது. இனவாத அரசியலைத் தோற்கடிப்பதற்காக இந்த நாட்டு மக்கள் எமக்கு ஆணையை வழங்கினார்கள். ஒற்றுமையை கட்டியெழுப்பவே எமக்கு ஆணை வழங்கினார்கள். எமது நாட்டில் மீண்டும் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். சிங்கள,தமிழ், முஸ்லிம்,மெலே, பேர்கர் அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழும் நிலையை ஏற்படுத்துவோம். கடந்த காலத்தில் பல்வேறு மோதல்கள் இருந்தன. அச்சத்தோடு தான் வாழ்ந்தார்கள்.

ஆனால் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. எந்த இனவாத அச்சமும் இன்றி அனைத்துப் பிரஜைகளுக்கும் செயற்பட இடமளித்துள்ளோம். எங்காவது மோதல்கள் நடந்ததா? அச்சத்துடன் இருக்கும் நிலை உருவானதா? அந்த அரசியல் நிறைவடைந்து விட்டது. அந்த நோக்கத்திற்காகத் தான் நீங்கள் எமக்கு ஆணையை வழங்கினீர்கள்.

அடுத்து எமது நாட்டில் இலஞ்சம்,ஊழல் மற்றும் வீண் விரயத்தை ஒழிக்க மக்கள் ஆணையை வழங்கினார்கள். அரசியல் அதிகாரத்தில் இருந்து திருட்டை முழுமையாக அளித்துள்ளோம். ஆனால் செய்வதற்கு எதுவுமின்றி பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.நானும் எனது அமைச்சரவையும் எனது எம்.பிக்களும் மக்களின் ஒரு சதத்தையும் திருடவோ வீண்விரயம் செய்யவோ மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கிறோம். அவ்வாறு யாராவது இருந்தால் அவர்களுக்கு எமது அரசில் இடமில்லை. அவ்வாறான அரசாங்கத்தை தான் மக்கள் எதிர்பார்த்தார்கள். இலஞ்ச ஊழல் பெறுவோருக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டவேண்டிய தேவை இருந்தது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுகள் பற்றி உங்களுக்கு தெரிவித்திருக்கிறேன். அவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.

பெருமளவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. பல மோசடிக்காரர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பில் நீதிமன்றம் நியாயமாக விசாரணை நடத்தி தண்டனை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.மோசடிக்காரர்களுக்கு எதிராக தண்டனை வழங்க மக்கள் தந்த ஆணையை நாம் நிறைவேற்றுகிறோம்.

அடுத்து, சட்டம் நியாயமாக நிறைவேற்றப்பட வேண்டும். மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு எ

உங்கள் கருத்துக்கு நன்றி.

நீங்கள் தேடியது கிடைத்ததா?

உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது தொலைபேசி இலக்கம் போன்ற தனிப்பட்ட விபரங்களைச் சேர்க்க வேண்டாம். இந்தப் படிவத்துக்கு எம்மால் பதிலளிக்க முடியாது. கேள்வி கேட்க அல்லது முறைப்பாடு செய்ய "எம்மைத் தொடர்புகொள்ள" பகுதியைப் பயன்படுத்துங்கள்.

https://epc.lk/ta/news/562-construction-of-the-nintavur-cultural-centre-resumes-with-th இலிருந்து 27 நவம்பர் 2026 அன்று அச்சிடப்பட்டது