Skip to main content
கிழக்கு மாகாண சபை නැගෙනහිර පළාත් සභාව Eastern Provincial Council
Menu

Menu

My cases

News

உலக நீரிழிவு தினம் 2024, மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை , நிந்தவூர் .

Date
22 November 2024

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச நீரிழிவு மருத்துவ முகாமும் நடைபவனியும்

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச நீரிழிவு மருத்துவ முகாமும் நடைபவனியும் கடந்த 2024.11.22 ம் திகதி வெள்ளிக்கிழமை நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் யூஎல். நிகாயா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் டாக்டர் எம்.ஏ நபீல் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வின் விசேட அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா ஆர் இஸ்ஸதீன் அவர்களும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே .எல். எம். ரைஸ் அவர்களும் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ .எம். அப்துல் லத்தீப் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். மேலும் கௌரவ அதிதிகளாக நீந்தவூர் பிரதேச செயலக நிர்வாக அதிகாரி ஏ .என். சலீம் அவர்களும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் ஏ. ஜி. பைரூஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் நீரிழிவு நோயாளிகளுக்கான இலவச குருதி பரிசோதனையும் பிரதம அதிதிகளால் அவர்களுக்கான விழிப்புணர்வூட்ட கருத்தரங்கும் நடைபெற்றதோடு கலந்து கொண்டவர்களுக்கு இயற்கை மூலிகை கஞ்சியும் பரிமாறப்பட்டது. இந்நிகழ்வின் விசேட ஒரு அங்கமாக நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையின் சுற்றாடல் மேம்பாட்டு குழுவினரால் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தக்கூடிய மூலிகை கன்றுகள் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகளும் நீரிழிவுக்கான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Thank you for your feedback.

Did you find what you were looking for?

Do not include personal details such as your name, NIC number or phone number. We cannot reply to this form. To ask a question or make a complaint, use Contact us.

Printed from https://epc.lk/en/news/864-2024-2 on 26 November 2026